பொது

வட & கிழக்குக் கரையோரப் பகுதிகளில் தீவிரமடையும் போதைப் பொருள் விநியோகம்

22/08/2024 06:29 PM

ஜாலான் புக்கிட் கியாரா, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) --  வட மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் போதைப் பொருள் விநியோகப் பிரச்சனை தீவிரமாகி வருவதாக உள்துறை அமைச்சு  தெரிவித்துள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட சிறு தரவுகளின் அடிப்படையில் இத்தகவல்களைத் தாம் பெற்றதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

அரச மலேசிய போலீஸ் படை, தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம், சுகாதார அமைச்சு மற்றும் தனியார் போதை மறுவாழ்வு மையங்கள் ஆகிய நான்கு தரப்பை உட்படுத்தி பெற்றப்பட்ட தகவலின் மூலமாக இத்தரவு பெறப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற அரச மலேசிய போலீஸ் படை 2024 சிறப்பு கலந்துரையாடலை நிறைவு செய்து வைத்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)