பொது

15ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் போதுமான சத்திய பிரமாண ஆதரவை முகிடின் பெறவில்லை

22/08/2024 06:41 PM

கோலாலம்பூர், 22 ஆகஸ்ட் (பெர்னாமா) --  2022ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக பிரதமராவதற்குப் போதுமான சத்திய பிரமாண ஆதரவை பெரிகாதான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முகிடின் யாசின் பெறவில்லை.

முகிடினுக்கு சொந்தமானதாக கூறப்படும் 115 சத்திய பிரமாணங்களில் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதவரைப் பெற்ற 10 சத்தியப் பிரமாணங்களில் தேசிய முன்னணி மற்றும் பெரிகாதான் நேஷனல் ஆகிய இருகட்சிகளுக்கும் ஆதரவு தரப்பட்டிருந்ததைத் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி சுட்டிக்காட்டினார்.

அம்னோவின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராவ் வாஜ்டி டுசுக்கியே இதற்கு நேரடி சாட்சி என்று அம்னோ தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.

அந்நேரத்தில் தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப் பிரமாண அதிகாரி முன்னிலையில் மூன்று ஆவணங்களில் கையெழுத்திட்டது காணொளி பதிவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)