BREAKING NEWS   PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | 
 விளையாட்டு

மலேசிய கிண்ணம்: அரையிறுதிக்குத் தேர்வாகிய ஜே.டி.தி

22/12/2024 04:17 PM

கோலாலம்பூர் , 22 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசிய கிண்ண காற்பந்து போட்டி.

கணித்ததைப் போலவே, ஜே.டி.தி அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியது.

நேற்றிரவு நடைபெற்ற இரண்டாம் சுற்று காலிறுதி ஆட்டத்தில், கே.எல் சிட்டி எஃப்.சி அணியுடன் மோதிய ஜே.டி.தி 4-0 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில், முதல் கோலை அடித்து ஜே.டி.தி தனது கோல் வேட்டையை ஆரம்பித்தது.

முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், இரண்டாவது கோலை அடித்து தனது கோல் எண்ணிக்கையை ஜே.டி.தி அதிகரித்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொங்கிய சில நிமிடங்களிலேயே கிடைத்த பினால்டி வாய்ப்பை சாதமாக்கி, அவ்வணி மூன்றாவது கோலை அடித்தது.

62-வது நிமிடத்தில் நான்காவது கோலை அடித்து, கே.எல் சிட்டி எஃப்.சி அணியின் பயணத்தை ஜே.டி.தி முடித்து வைத்தது.

இதன் வழி, 6-1 என்ற மொத்த கோல்கள் எண்ணிக்கையில் ஜே.டி.தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், நெகிரி செம்பிலான் எஃப்.சி உடன், திரெங்கானு எஃப்.சி களமிறங்கியது.

கோலா நெருசில் நடைபெற்ற இவ்வாட்டத்தில், 4-2 என்ற கோல்களில் திரெங்கானு எஃப்.சி வெற்றி பெற்றது.

24-வது நிமிடத்தில் கே.நந்தகுமார் அடித்த முதல் கோலும்,

பத்து நிமிடங்கள் கழித்து, ஏ.செல்வன் அடித்த இரண்டாவது கோலும் நெகிரி செம்பிலான் எஃப்.சியை முன்னணி வகிக்க செய்தது.

நெகிரி செம்பிலான் எஃப்.சி முன்னணி வகித்தாலும், முதல் பாதி ஆட்டம் நிறைவடைவதற்குள் திரெங்கானு எஃப்.சி இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது.

81-வது நிமிடத்தில் மூன்றாவது கோலையும், கடைசியில் கிடைத்த பின்னால்டி வாய்ப்பில் நான்காவது கோலையும் அடித்து திரெங்கானு வெற்றியை உறுதி செய்துக் கொண்டது.

6-2 என்ற மொத்த கோல்கள் எண்ணிக்கையில் அரையிறுதிக்கு முன்னேறிய திரெங்கானு எஃப்.சி, ஜே.டி.தியுடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)