பொது

குற்றவாளி & எதிர்பாரா நபர் பதிவு சட்டத்தை உள்துறை அமைச்சு ஆராய்கிறது

22/08/2024 06:48 PM

புத்ராஜெயா, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டு குற்றஞ்சாட்டப்படாத நபர்களை உள்ளடக்கிய குற்றவாளி மற்றும் எதிர்பாரா நபர் பதிவு சட்டம், சட்டம் 7-ஐ உள்துறை அமைச்சு ஆராய்ந்தும் மீண்டும் சரிபார்த்தும் வருகிறது.

இச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட குழுவினரைக் கருத்தில் கொண்டு, தமது அமைச்சு அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்குவது சரியான நடவடிக்கையே என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

வேலைக்கு விண்ணப்பிப்பது அல்லது வியாபாரத்தைத் தொடங்குவது போன்ற புதிய வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொள்ள அந்த வாய்ப்பு அவர்களுக்கு உதவும் என்றும் சைஃபுடின் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தாலும், அவரிகள் அனைவரின் குற்றப்பதிவையும் சீர்ப்படுத்தி விட முடியாது என்றும் அவர்  கூறினார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் உட்பட சம்பந்தப்பட்ட சட்டத்தில் பல்வேறு அம்சங்களை கேடிஎன் விரிவாக ஆராயவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)