பொது

மாணவர்களின் ஆங்கில புலமையைப் பலப்படுத்தும் TEENEAGLE அனைத்துல ஆங்கில மொழி போட்டி

23/08/2024 05:36 PM

கோலாலம்பூர், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) --  அனைத்துல மொழியாக போற்றப்படும் ஆங்கிலம், கல்வி உட்பட நிர்வாக சேவைகளில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அதில் மாணவர்கள் புலமை பெறுவதற்கான முயற்சிகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்தகைய நோக்கத்தோடு சிலாங்கூர் பந்திகில் இயங்கும் பந்திங் BLUE WAVE CAMBRIDGE ENGLISH & NETWORKING என்ற குழுவினர் TeenEagle அனைத்துல ஆங்கில மொழி போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

ஆங்கில நாவல்கள் உட்பட படங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் இயங்கலையில் நடந்த வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஏற்பாட்டு குழுவினர் வழியாக அடுத்தக்கட்ட போட்டிக்காக லண்டனில் உள்ள ப்ரூனல் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

8 முதல் 18 வயதுகுட்பட்ட மாணவர்களைக் கொண்டு மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த 14 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில், ஈப்போ, எம்.ஜி.எஸ் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த உஷெய்தா ராஜேந்திரன் மாணவி 6 பதக்கங்களை வென்றதுடன் TeenEagle இரண்டின் ஒட்டுமொத்த வெற்றியாளர் ஆனார்.

''நான் படிவம் இரண்டு எம்.ஜி.எஸ் பள்ளியில் படிக்கிறேன். TeenEagle போட்டியில் கலந்து கொண்டு பல தங்க பதக்கங்களை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடன் சேர்ந்து என்னுடைய இரண்டு தங்களைகளும் கலந்து கொண்டனர்'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் பங்கேற்ற இப்போட்டியில் உஷானா ராஜேந்திரன் மற்றும் தானியா ராஜேந்திரன் முறையே இரண்டு தங்கங்களை வென்றனர்.

பிள்ளைகளின் வெற்றி குறித்து உஷெய்தா ராஜேந்திரனின் தந்தை தமது மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

''பிரதமர் மந்திரியின் சிறப்பு உதவியாளருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த பிள்ளைகளின் பயணித்திற்கு மிகவும் உதவியாக இருந்தார். இது போல் குழந்தைகள் பல அனைத்துலக போட்டிகளில் கலந்து கொள்வது ஆசை என்று எங்களிடம் தெரிவித்திருந்தார்'', என்று ராஜேந்திரன் கூறினார்.

இம்மாதம் நடந்து முடிந்த TeenEagle அனைத்துல ஆங்கில மொழி போட்டியில் 24 நாடுகளிலிருந்து 250 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)