பொது

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் 2024இல் பல்வேறு வியூகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன

22/12/2024 05:54 PM

கோலாலம்பூர், 22 டிசம்பர் (பெர்னாமா) - மலேசிய மக்களுக்கும் நாட்டிற்கும் நீண்டகால செழிப்பை ஏற்படுத்தும் பொருட்டு 2024ஆம் ஆண்டு முழுவதும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மடானி அரசாங்கம் பல்வேறு வியூகத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

"Sorotan 2024: Melonjak Ekonomi, Melimpah Kemakmuran” என்ற தலைப்பிலான தமது முகநூல் பதிவில், இவ்வாண்டு அமல்படுத்தப்பட்ட சில திட்டங்களையும் நாட்டின் அடைவுநிலையையும், நிதி அமைச்சருமான பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரையில் 25,470 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்திய இலக்கவியல் பொருளாதார முதலீட்டில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது அந்த அடைவுநிலைகளில் ஒன்றாகும்.

மலேசியாவில் முதலீடு செய்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாப்ட், என்விடியா மற்றும் வாய்.தி.எல், ஒராக்கல், எ.டபல்யு.எஸ், கூகள் ஆகியவையும் அடங்கும்.

அந்த முதலீடுகள் தொழில்நுட்ப அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் மலேசியாவைத் தென்கிழக்கு ஆசியாவில் இலக்கவியல் தளமாக உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் எதிர்கால வளப்பத்திற்கு வரும் ஆண்டுகளில் அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக உழைக்கும் என்று அன்வார் மேலும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)