பொது

நில அமிழ்வு சம்பவம்; பத்தாங் காலி நிலச்சரிவில் பயன்படுத்தப்பட்ட மோப்ப நாய்கள் மீண்டும் பணியில்

27/08/2024 06:57 PM

கோலாலம்பூர், 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2022 டிசம்பர் மாதம், சிலாங்கூர், பத்தாங் காலியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது பயன்படுத்தப்பட்ட மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை,JBPM-இன் மோப்ப நாய் பிரிவு, கே9-இன் ஃபிரான்கி மற்றும் டென்டி ஆகிய இரண்டு நாய்கள் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

அவ்விரு நாய்களும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்தியப் பிரஜையான விஜய லெட்சுமியைக் கண்டுபிடிக்க, தேடல் மற்றும் மீட்பு குழுவிற்கு உதவ இன்று மாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர், நில அமிழ்வு குழிக்குள் கொண்டுச் செல்லப்பட்ட இவ்விரு நாய்களும் சுமார் 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டவரை கண்டுபிடிக்கும் பணிகளை மேற்கொண்டன.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, இந்த மோப்ப நாய் சேவை பயன்படுத்தப்பட்டது.

எனினும், எந்தவொரு அறிகுறியும் கிடைக்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)