பொது

அறிவியல், கணிதம் & ஆங்கில பாடங்களின் ஆளுமைக்கு கல்வி அமைச்சு வலியுறுத்த வேண்டும்

30/08/2024 07:29 PM

புக்கிட் மெர்தாஜாம், 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டின் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில், அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில மொழி பாடங்களின் ஆளுமைக்கு கல்வி அமைச்சு வலியுறுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, AI, பசுமை ஆற்றல் மாற்றம், இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டதால் பாடத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு, அம்மூன்று பாடங்களின் ஆளுமை மிகவும் அவசியமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துரைத்தார்.

மாணவர்களிடையே அந்த பாடங்களுக்கான ஆளுமை, தேசிய மொழி பயன்பாட்டிற்கு இணையாக இருப்பதையும் அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஒருவருக்கொருவர் மரியாதை அளிப்பது போன்ற நன்னெறிப் பண்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இன்று, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் உயர் நிலை பள்ளிக்கு வருகை மேற்கொண்டபோது, உரையாற்றிய பிரதமர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)