பொது

பாலியல் குற்றத்திற்காக டாய் சைட்டுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

30/08/2024 07:59 PM

ஷா ஆலாம், 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பெண் ஒருவரை கற்பழித்த குற்றத்திற்காக பிரபல சமயப் போதகர், Da'i Syed என்றழைக்கப்படும் Syed Shah Iqmal Syed Mohd Shaiful-க்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் மூன்று பிரம்படிகள் விதித்து ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.  

தற்காப்பு வழக்கின் முடிவில், நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து, நீதிபதி நோராசிலின் ஒத்மான், 29 வயதான Syed Shah Iqmal-லுக்கு அத்தீர்ப்பை வழங்கினார்.  

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, ஐ-சிட்டி ஷா ஆலாமில், 23 வயதான பெண்ணை, Syed Shah Iqmal பாலியல் பலாத்தக்காரம் செய்ததாக, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 376 உட்பிரிவு ஒன்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

போலீஸ் தரப்பின் தொடக்கக் கட்ட அறிக்கை ஆதரவாக இருந்தாலும்,  குற்றஞ்சாட்டப்பட்டவரின் தற்காப்பு வாதத்தில், மறுப்பும் மறுசிந்தனையும் மட்டுமே இருந்ததாக தமது தீர்ப்பில் நோராசிலின் கூறினார்.

மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபித்திருக்கும் வேளையில், குற்றம் சாட்டப்பட்டவரின் சாட்சியம் அதனை நிராகரிக்க போதுமானதாக இல்லை.

அதோடு, அப்பெண்ணை Syed Shah Iqmal தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)