பொது

மைபிபிபி-இன் மேல்முறையீடு தேமு உச்சமன்றக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்

01/09/2024 05:23 PM

கோலாலம்பூர், 01 செப்டம்பர் (பெர்னாமா) --  தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக இணையும் மக்கள் முற்போக்கு கட்சி, மைபிபிபி-இன் மேல்முறையீடு தேசிய முன்னணியின் அடுத்த உச்சமன்றக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அக்கட்சியைச் சங்கங்களின் பதிவிலாகா, RoS அங்கீகரித்ததைத் தொடர்ந்து மைபிபிபி தலைவர்கள் அந்த மேல்முறையீட்டை செய்துள்ளதாக தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

"முடிவெடுக்க தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டம் வரை நாங்கள் கால அவகாசம் கேட்டுள்ளோம். எனினும், கட்சி தலைவர்களும் தேசிய முன்னணியில் உள்ள கட்சி பிரதிநிதிகளும், நீதிமன்றத்தின் முடிவு மற்றும் நடப்பிலுள்ள தலைமைத்துவத்தின் மேல்முறையீட்டை கருத்தில் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் கூறினார்.

இன்று, அனைத்துலக வாணிப மையத்தில், மைபிபிபி-யின் 71ஆவது பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

இந்த மேல்முறையீடு தொடர்பான முடிவு அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)