பொது

சுங்கை கிளந்தான் கரையோரத்தில் ஜே.பி.எஸ் அவசர பணிகளை மேற்கொள்கிறது

23/12/2024 07:40 PM

கோத்தா பாரு, 23 டிசம்பர் (பெர்னாமா) -- ஜாலான் போஸ்ட் ஆபிஸ் லாமாவில், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிக்கு அருகில், இடிந்து விழுந்த சுங்கை கிளந்தான் கரையோரத்தில் நீர்பாசன மற்றும் வடிகால் துறை, ஜேபிஎஸ் இன்று அவசர பணிகளை மேற்கொள்கிறது.

அத்தகவலை கிளந்தான் ஜேபிஎஸ் இயக்குநர் டாக்டர் சித்தி ஃபைருஸ் சகாரியா உறுதிப்படுத்தியதாக கோத்தா லாமா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹஃபிட்சா முஸ்தாகிம் தெரிவித்தார்.

''நான் இன்று காலை கிளந்தான் மாநில ஜேபிஎஸ் இயக்குநருடன் பேசினேன். அந்தக் கரையோரம் மோசமாக இடிந்து விழாமல் தடுக்க அல்லது சரிசெய்ய அவசரப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன். எனவே, பொதுமக்களாகிய நாங்கள் வலைகள் பொருத்துவது, மண் மூட்டைகளைக் கொண்டு அடைப்பது போன்ற பணிகளை நிபுணர்களிடமே விட்டுவிடுவோம்,'' என்றார் அவர்.

இன்று, கோத்தா பாருவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது டாக்டர் ஹஃபிட்சா அவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, விரைவில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கடைகளைக் காலி செய்ய அறிவிக்கை வெளியிடப்படும் என்று கோத்தா பாரு நகராண்மைக் கழகத் தரப்பு தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)