விளையாட்டு

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டி; லிவர்பூல் வெற்றி

23/12/2024 07:48 PM

லண்டன், 23 டிசம்பர் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், இன்று அதிகாலை, எதிரணியில் நடந்த ஆட்டத்தில், லிவர்பூல் 6-3 என்ற கோல்களில் டோட்டன்ஹாமைத் தோற்கடித்தது. 

இந்த வெற்றியின் வழி, அது 39 புள்ளிகளோடு பட்டியலில் முதல் நிலையைத் தற்காத்துக் கொண்டுள்ளது.  

பிரிமியர் லீக் பட்டியலில், செல்சி 35 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கும் வேளையில், ஆர்செனல் 33 புள்ளிகளோடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது. 

முதல் பாதிவரை இரு அணிகளும் ஆட்டத்தை மாறி மாறி ஆக்கிரமித்தால் கோல்களும்  சரிசமமாக போடப்பட்டது. 

சொந்த அரங்கில், தற்காப்பு அரணில் டோட்டன்ஹம் கோட்டை விட்டதால், இரண்டாம் பாதியில் லிவர்பூல் நான்கு கோல்களை அதற்கு சாதகமாக்கியது. 

லிவர்பூலுக்கான ஆறு கோல்களில், இரு கோல்களை அடுத்த இரு கோல்களை முஹமட் சாலாவும் போட்டனர். 

32 வயதான சாலாவின் அந்த இரு கோல்களைச் சேர்த்து,  மொத்தமாக அவர் லிவர்பூலுக்கு 229 கோல்கலை அடித்துள்ளார். 

-- பெர்னாமா