பொது

இம்மாதம் பயனீட்டாளர்களின் உள்ளடக்கம் தொடர்பான எஸ்.ஓ.பி குறித்து கலந்துரையாடல்

01/09/2024 06:28 PM

கூலாய், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- பயனீட்டாளர்களின் உள்ளடக்கம் தொடர்பான செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி குறித்து கலந்துரையாட சமூக வலைத்தள வழங்குநர்களுடன் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் மூலம் தொடர்பு அமைச்சு இம்மாதம் சந்திப்பு நடத்தவிருக்கிறது.

பொறுப்பற்ற தரப்பினரால், தனிப்பட்ட நபரின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படாததை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இச்சந்திப்பு நடத்தப்படுவதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

'deepfake' தொழில்நுட்பம் நீண்ட காலமாக உள்ளது. ஆனால், அண்மையக் காலமாக தொழில்நுட்ப வளர்ச்சியினால் அதைப் பயன்படுத்துவதற்கு பொது மக்களுக்கு எளிதாக உள்ளது. மோசடி செய்பவர்களையும் ஆபாச பட தொழில்துறையில் உள்ளவர்களையும் இது உள்ளடக்கியுள்ளது. அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், மேத்தா, டெலிகிராம் மற்றும் டிக்டோக் போன்ற தளங்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்,'' என்றார் அவர்.

இதற்கு முன்னர், செயற்கை நுண்ணறிவு, AI மூலம் உள்நாட்டு மக்களை உட்படுத்தி ‘deepfake’ எனப்படும் காணொளி அல்லது போலி படங்களைப் பரப்புவது குறித்து எம்சிஎம்சி புகார் ஏதும் பெற்றுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ அவ்வாறு பதிலளித்தார்.

அச்சந்திப்பின் வழி, சமூக வலைத்தள வழங்குநர்கள் குற்றவியல் அம்சங்கள் கொண்ட உள்ளடக்கங்கள் மீது சுய கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக அவர், ‘Takluk: Lahad Datu’ திரைப்படத்தை கூலாய் மக்களுடன் கண்டு களித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)