பிரயாக்ராஜ், 23 டிசம்பர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் உலகின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றான மஹா கும்பமேளாவை முன்னிட்டு வட இந்திய நகரமான பிரயாக்ராஜ்ஜில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பக்தர்கள் கூட்டமாக கலந்து கொண்டனர்.
ஜனவரி 13 தொடங்கி 26-ஆம் தேதி வரை இந்த கும்பமேளா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் கும்பமேளா விழா, இந்தியாவின் புனித நதிகளான நஷிக், உஜ்ஜாயின், ஹரிட்வார் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நான்கு நகரங்களில் ஒன்றில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
அதோடு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா கும்பமேலா பிரயாக்ராஜ்ஜில் மட்டும் நடத்தப்படும்.
இவ்விழாவை முன்னிட்டு அதிகமான பக்தர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு ஏற்பாட்டாளர்கள் தற்காலிக பாலங்கள், பெரிய அளவிலான சமையலறைகள் மற்றும் ஆயிரக் கணக்கான கழிவறைகளைக் கட்டியுள்ளனர்.
மேலும், ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு ஆயிரக்கணக்கான பெரிய கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)