குவைத், 23 டிசம்பர் (பெர்னாமா) -- குவைத் மன்னர் ஷேக் மேஷல் அல்-அமாட் அல் சபா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின மிக உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்தியாவிற்கும் குவைத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் மோடியின் முயற்சியை அங்கீகரித்து THE ORDER OF MUBARAK THE GREAT விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக குவைத் நாட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.
43 ஆண்டுக்குப் பிறகு குவைத்திற்குச் செல்லும் இந்திய பிரதமர் முதலாவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
ஷேக் மேஷல் அழைப்பை ஏற்று குவைத்திற்கு வருகைப் புரிந்திருக்கும் மோடி, அந்நாட்டு தலைவர்களுடன் சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
அவற்றில் வருங்கால பங்காளித்துவம் குறித்த செயல்திட்டம், புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான தொடர்பு ஆகியவையும் அடங்கும்.
இப்பயணத்தின்போது மோடி, அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார்.
-- பெர்னாமா