BREAKING NEWS   Paris route represents Malaysia Airlines’ 68th destination and will be served by A350-900 aircraft - Capt Izham | 
 பொது

அரசாங்க & அமைச்சுகளின் கொள்கை வரைவில் ஜாக்கிம் ஈடுபட்டுள்ளதா?

03/09/2024 06:19 PM

புத்ராஜெயா, 03 செப்டம்பர் (பெர்னாமா) -- மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை ஜாக்கிம் அதிகாரிகள் பல அரசாங்கத் துறைகள் மற்றும் அமைச்சுகளின் கொள்கை வரைவில் ஈடுபட்டுள்ளதாக  MCCBCHST எனப்படும் பௌத்தம், கிறிஸ்துவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றுக்கான மலேசிய ஆலோசனை மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை, அடிப்படையற்றது.

அந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசாங்க துறைகள் மற்றும் அமைச்சுகளில், ஒருமைப்பாடு மற்றும் ஆன்மீக நிரப்புதலின் அடிப்படையில் உதவ மட்டுமே பணியமர்த்தப்பட்டிருப்பதாக தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் தெளிவுபடுத்தினார்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது, அவ்விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

ஜாக்கிம் அதிகாரிகளைப் பணியமர்த்தும் கொள்கை புதிதல்ல என்றும் 2006 அல்லது 2007-ஆம் ஆண்டும் முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)