பொது

காசா மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி மலேசியாவும் ரஷ்யாவும் கோரிக்கை

05/09/2024 06:58 PM

விளாடிவோஸ்டாக், 05 செப்டம்பர் (பெர்னாமா) --  காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் போரை நிறுத்தும்படி மலேசியாவும் ரஷ்யாவும் கோரிக்கை விடுத்துள்ளன.

காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ள முக்கிய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மறுப்பது தொடர்பில் அவ்விரு நாடுகளும் வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

விளாடிவோஸ்டாக்கு மேற்கொண்ட பயணத்தின் இறுதி நாளில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

காசாவில் எகிப்தின் மனிதாபிமான உதவிகள் குறித்து கருத்துரைத்த அன்வார், எகிப்துக்கு எதிரான இஸ்ரேலின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளையும் மலேசியா மறுப்பதாக குறிப்பிட்டார்.

எகிப்து, பொறுமையாகவும் திறமையாகவும் அந்த உதவிகளை வழங்கி வரும் வேளையில், அந்நாட்டிற்கு அதற்கு வழிவிட வேண்டும் என்றும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)