பொது

சுய கட்டுப்பாடு தொடர்பில் கற்றுக் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது இணைய பாதுகாப்பு சட்ட மசோதா

05/09/2024 07:34 PM

கோலாலம்பூர், 05 செப்டம்பர் (பெர்னாமா) -- சமூக வலைத்தளம் அல்லது இணையம் வழியான செயலிகளில், சுய கட்டுப்பாடு மற்றும் கட்டொழுங்கு தொடர்பில் பொது மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது இணைய பாதுகாப்பு சட்ட மசோதா.

எனினும், மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு இச்சட்ட மசோதா தடையாக இருக்காது என்று, சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

''நாங்கள் கருத்து சுதந்திரத்தில் சமரசம் காண மாட்டோம் என்று பொது மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இதுதான் இன்றைய மடானி அரசாங்கத்தின் நிலைப்பாடு. நாங்கள் சமரசம் காணமாட்டோம் என்றால், உங்களுக்கு அரசியலமைப்பு உரிமைகள் இருந்தால், நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள். உங்கள் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது. ஆனால், நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்தி, அது புறங்கூறுதல் மற்றும் அவதூறு போன்ற ஒரு அறிக்கையைப் போல தீங்கு விளைவிக்கும் என்றால், பல சட்டங்கள் உங்கள் மீது பயன்படுத்தப்படும்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற இணையக் குற்றங்கள் தொடர்பிலான அனைத்துலக சட்ட மாநாட்டின் தொடக்க விழாவிற்குப் பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)