பொது

குடிநுழைவுத் துறை முகப்புகளில் 277 திடீர் சோதனை நடவடிக்கை

09/09/2024 05:40 PM

புத்ராஜெயா, 09 செப்டம்பர் (பெர்னாமா) --   கடந்தாண்டிலிருந்து மலேசியாவின் அனைத்து நுழைவாயில்களில் உள்ள குடிநுழைவுத் துறை முகப்புகளிலும், அத்துறை 277 திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறை மற்றும் அனைத்து விதிமுறைகளும் ஒவ்வொரு குடிநுழைவுத் துறை அதிகாரியும் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

''நாங்கள் அங்குச் செல்லும்போது எங்களின் அதிகாரிகள் விதிமுறைகளை மீறுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அவர்கள் மீது நாங்கள் ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்வோம். அதே நேரத்தில், அந்த அதிகாரி அங்கு இருப்பதற்கு தகுதி இல்லாமல் இருப்பதாக நாங்கள் உணர்ந்தால் அவரின் பணியிடத்தை மாற்றுவோம். இது வேலை சுழற்சியை உட்படுத்தும். இதுபோன்ற அதிகாரிகள் அந்த முக்கியமான பகுதிகளில் அதிக நாள்கள் வேலை செய்வதற்கு நாங்கள் அனுமதியளிக்க மாட்டோம்'', என்று அவர் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற குடிநுழைவுத் துறையின் சிறப்பு சோதனை நடவடிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ருஸ்லின் அவ்வாறு கூறினார்.

இந்த நடவடிக்கை அவ்விவகாரத்தைக் கையாள உதவும்.

அதே வேளையில், ஒருங்கிணைப்பின் அளவை அதிகரிக்கவும், அமலாக்கத்தை வலுப்படுத்தவும் வழிச் செய்வதோடு அத்துறையின் நற்பெயரைப் பாதுகாக்கவும் உதவும் என்று ருஸ்லின் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)