தென் கொரியா, 24 டிசம்பர் (பெர்னாமா) -- தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோலின் பதவி நீக்கம் மற்றும் அதைத் தீர்மானிப்பதற்கான செயல்முறை குறித்த வழக்கின் மீதான முதல் பொது விசாரணை இம்மாதம் 27-ஆம் தேதி, அந்நாட்டின் அரசியலைப்பு நீதிமன்றம் நடத்தவுள்ளது.
யூன்னைப் பதவியில் இருந்து நீக்குவதா அல்லது அதனை நிராகரித்து அவரின் அதிகாரங்களை மீட்டெடுப்பதா என்பது குறித்த முடிவை அரசியலைப்பு நீதிமன்றம் 180 நாட்களுக்குள் எடுக்க வேண்டும்.
அவர் பதவி நீக்கப்பட்டாலோ அல்லது பதவி விலகினாலோ, 60 நாட்களுக்குள் அதிபருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பொதுவாக, தென் கொரிய அரசியலைப்பின் கீழ் ஒரு அதிபரை பதவி நீக்கம் செய்யவதென்றால் அதற்கு ஆறு நீதிபதிகள் உடன்பட வேண்டும்.
எனினும், ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட அரசியலைப்பு நீதிமன்றத்தில் தற்போது மூன்று காலியிடங்கள் இருக்கும் நிலையில் யூனை பதவி நீக்கம் செய்ய அவர்கள் ஏகமனதாக வாக்களிக்க வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)