உலகம்

துருக்கியில் வெடிபொருள் தொழிற்சாலையில் விபத்து; 12 பேர் பலி

24/12/2024 06:35 PM

பாலிகேசிர், 24 டிசம்பர் (பெர்னாமா) -- வடமேற்கு துருக்கியில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும், நால்வர் காயத்திற்கி ஆளாகி இருப்பதாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை முற்றிலும் சேதமடைந்தது.

பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள காவக்ளி கிராமத்தில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் அனுப்பப்பட்டனர்.

மேலும், அவசர உதவிகளுக்காக சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்களும் அங்கு விரைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)