உலகம்

ஃப்ரீலிமோவின் வெற்றியை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

24/12/2024 06:42 PM

மொசம்பிக், 24 டிசம்பர் (பெர்னாமா) -- மொசாம்பிக்கில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஆளும் கட்சியான ஃப்ரீலிமோவின் வெற்றியை நேற்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

நடந்து முடிந்த இத்தேர்தலில், வாக்கு முறைகேடு நடந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்ட வேளையில் போலீசாருடனான மோதலில் குறைந்தது 130 பேர் உயிரிழந்ததாக பிளாட்டாஃபார்மா முடிவு குழு குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பு மன்றம், தேர்தல் செயல்முறையின் இறுதி முடிவைக் கொண்டுள்ளது.

அதன் தீர்ப்பு 1975-ஆம் ஆண்டு தொடங்கி Frelimo கட்சியின் ஆட்சியில் இருக்கும் மூன்று கோடியே 50 லட்சம் மக்களைக் கொண்ட அந்த தென்னாப்பிரிக்க நாட்டில் மொசாம்பிக்கில் மேலும் போராட்டங்களைத் தூண்டியது.

தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை மேற்கத்திய கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் மொசாம்பிக் வரலாற்றில் ஃப்ரீலிமோவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் மபுடோவில் உள்ள மாநாட்டு மையத்திற்கு வெளியே, அரசியலமைப்பு மன்ற மூத்த நீதிபதி,  ஃப்ரீலிமோவின் டேனியல் சாப்போ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் அக்கட்சி தனது பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டதாகவும் அறிவித்தார்.

பலத்த போலீஸ் காவலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.

எனினும், அறிவிப்பு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)