பொது

பேடோங்டார்ன் ஷின்வத்ராவுக்கு அன்வார் வாழ்த்து

10/09/2024 08:06 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) -- செப்டம்பர் 6ஆம் தேதி பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து தாய்லாந்தின் 31வது பிரதமர் பேடோங்டார்ன் ஷின்வத்ராவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  தொலைபேசி மூலம் இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றார்.

மலேசியா - தாய்லாந்து இடையேயான நெருங்கிய உறவு பேடோங்டார்ன் தலைமையில் தொடர்ந்து வளரும் என்று தமது முகநூல் பக்கத்தின் ஒரு பதிவின் மூலம்,  நம்பிக்கை தெரிவித்தார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும், ஒட்டுமொத்த வட்டாரத்தின் முன்னேற்றத்திற்காகவும் பேடோங்டார்னுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தமது உறுதிப்பாட்டையும் அன்வார் வெளிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)