உலகம்

பலத்த பாதுகாப்புடன் தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

15/01/2025 03:36 PM

சியோல், 15 ஜனவரி (பெர்னாமா) --   தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 3-ஆம் தேதி அந்நாட்டில் இராணுவ சட்டத்தை அறிவித்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ சட்டத்தை அறிவித்த சில மணி நேரங்களில் அதை மீட்டுக் கொண்டாலும், அந்நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட அந்த அறிவிப்பு வழிவகுத்தது.

நாட்டில் அமைதியைச் சீர்குலைத்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று
எதிர்க்கட்சிகள் நெருக்குதல் அளித்து வந்தன.

அதனை தொடர்ந்து அந்நாட்டில் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் யூன் சுக் யோலின் ஆதரவாளர்களும் வீதி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன் விளைவாக, யூன்னை கைது செய்ய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், யூனின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டதால் அவரை கைது செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இன்றும் அங்கே குழுமியிருந்த ஆதரவாளர்களைத் தகர்த்து, அதிகாரிகள் அவரை கைது செய்யதனர்.

இக்கைது நடவடிக்கையில் சுமார் 3,000 போலீஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)