பொது

நாட்டில் நேற்று ஒரு குரங்கம்மை சம்பவத்தை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது

17/09/2024 05:34 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில், நேற்று ஒரு குரங்கம்மை சம்பவம் அல்லது MPOX,  கிளேட் II உருமாறியத் தொற்றை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

இவ்வாண்டு முழுவதிலும் சுகாதார அமைச்சின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குரங்கம்மை தொற்று என்று சந்தேகிக்கப்படும் 58 நோய்ச் சம்பவங்களில் அது அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமட் ரட்சி அபு ஹசான் தெரிவித்தார்.

உள்நாட்டு ஆடவரான சம்பந்தப்பட்ட அந்நோயாளிக்கு, செப்டம்பர் 11-ஆம் தேதி காய்ச்சல், தொண்டை வலி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதோடு செப்டம்பர் 12-ஆம் தேதி, தோலில் நிறைய சிறிய சிவப்பு புள்ளிகள் தோன்றின.

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அந்நபர், அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னர், கடந்த 21 நாட்களில் எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ளவில்லை.

தற்போது, அவர் சீரான நிலையில் இருக்கிறார்.

2023-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி முதல், நாட்டில் 10 குரங்கம்மை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)