பொது

மலேசியாவில் முதலாவது செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும்

28/09/2024 06:29 PM

பெய்ஜிங், 28 செப்டம்பர் (பெர்னாமா) -- மலேசியாவில் முதலாவது செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு துறை ஆய்வு மையத்தை உருவாக்குவதன் மூலம், குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள் வழியான 'direct-to-cell' தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்க முடியும்.

சீன செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனம், கீஸ்பேஸ்சும், தொலைத்தொடர்பு நிறுவனம் அல்டெல்லும் இணைந்து உருவாக்கவிருக்கும் அம்மையம், சம்பந்தப்பட்ட அத்தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான ஆய்வுத் தளமாக அமையும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

தொலைதூர இடங்களில் உள்ள இணைப்புப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் என்பதால், இந்த 'direct-to-cell' தொழில்நுட்பம் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

"செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கு ஒரு COE அல்லது ஆர்&டி மையம் இருந்தால், இத்துறையில் ஈடுபட மேலும் அதிகமான மலேசியர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் காரணம் நாட்டில் வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய புதிய துறைகளில் இதுவும் ஒன்று என்பது மறுப்பதற்கில்லை,'' என்றார் ஃபஹ்மி.

சீனா, பெய்ஜிங்கில், கீஸ்பேஸ் மற்றும் அல்டெல் குழும நிறுவனத்தின் கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியைக் கண்ட பின்னர் பெர்னாமாவிடம் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)