பொது

முதியோருக்கான சுகாதார சேவை & மறதி நோய்க்கான செயல் திட்டம் அறிமுகம்

01/10/2024 06:04 PM

புத்ராஜெயா, 01 அக்டோபர் (பெர்னாமா) --  2023-இல் இருந்து 2030-ஆம் ஆண்டு வரை முதியோருக்கான சுகாதார சேவை செயல் திட்டம் மற்றும் மறதி நோய்க்கான செயல் திட்டம் ஆகிய இரு திட்டங்களைச் சுகாதார அமைச்சு இன்று அறிமுகப்படுத்தியது.

2030 ஆண்டு வரை முதியோருக்கான சுகாதார சேவையின் குறிக்கோளாக அவ்விரு திட்டங்களும் அமையும் என்று சுகாதார அமைச்சர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

நோயாளியை மையமாகக் கொண்ட முழுமையான சுகாதார சேவையின் வழி தடுப்பு மற்றும் சுய பராமரிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சமூகத்தில் முதியவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான வியூகங்களை இத்திட்டங்கள் கொண்டுள்ளதாக  டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

''நான் சற்று முன்பு குறிப்பிட்ட தொற்று நோய்களால் சுகாதார அமைச்சின் அண்மைய செலவுகள், கவனமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் நேரடி மறைமுகச் செலவு, வேலையில் ஏற்படும் விளைவு உற்பத்தி திறன் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்பட்டன. அண்மையில் NCD சுமைகளின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு மொத்தம் ஆறு கோடியே 40 லட்சம் ஆகும்'', என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் 'Sihat Madani Di Usia Emas' எனும் கருப்பொருளில் அனுசரிக்கப்பட்ட சுகாதார அமைச்சு அளவிலான 2024ஆம் ஆண்டு முதியோர் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றும் போது சுல்கிப்ளி அஹ்மட் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)