விளையாட்டு

காலிறுதிக்கு தேர்வாகினார் கோகோ காஃப்

02/10/2024 07:12 PM

பெய்ஜிங் , 02 அக்டோபர் (பெர்னாமா) -- சீன பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு அமெரிக்காவின் கோகோ காஃப் தேர்வாகியுள்ளார்.

காயம் காரணமாக ஜப்பானின் நவோமி ஒசாகா போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, காலிறுதிக்கு செல்லும் கோகோ காஃப்பின் பயணம் எளிதானது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நான்கு முறை Grand Slam பட்டத்தை வென்றிருக்கும் நவோமி ஒசாகாவுடன் கோகோ காஃப் மோதினார்.

முதல் சுற்றில் 3-6 என்ற புள்ளிகளில் ஒசாகா வெற்றி பெற்றார்.

இரண்டாம் செட்டிலும் 6-4 என முன்னணி வகித்தாலும், காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து ஒசாகா விடைபெற்றுக் கொண்டார்.

மகளிருக்கான மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயினின் பாவ்லா படோசா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 6-4, 6-0 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)