உலகம்

மெக்சிக்கோவை தாக்கியது ஜோன் சூறாவளி

03/10/2024 06:36 PM

அக்காபுல்கோ, 03 அக்டோபர் (பெர்னாமா) -- மெக்சிக்கோ, அக்காபுல்கோவில் கடற்கரை ஓரப் பகுதிகளைத் தாக்கிய ஜோன் சூறாவளியினால் அங்கிருந்து வீடுகள், வணிக தளங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.

இச்சூறாவளியினால், சம்பந்தப்பட்ட கடற்கரை ஓரப் பகுதியில் உள்ள உள்கட்டமைப்புகள் மிகப்பெரிய சேதம் அடைந்துள்ளதோடு சாலைகள் முழுவதும் சகதியாக காணப்படும் காட்சி ஆளில்லா விமானத்தின் பதிவு காட்டுகிறது.

கடந்த வாரம், மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையை ஜோன் சூறாவளி கடந்ததால் அங்கு கனமழைப் பெய்தது.

இதனால், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, கியுரெரோவில் வசிப்பவர்களின் வீடுகளின் முதல் மாடி வரை நீர் மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து ஜான் சூறாவளி அங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]