பொது

கெடா, சரவாக்கிலும் புதிய புற்றுநோய் மையங்களைத் திறக்கும் திட்டம்

05/10/2024 05:38 PM

புத்ராஜெயா, 05 அக்டோபர் (பெர்னாமா) --  இதனிடயே, கெடா, சரவாக் ஆகிய மாநிலங்களில் புதிய புற்றுநோய் மையங்களைத் திறக்கும் திட்டங்களின் மூலமாக அநோய்க்கான தொடக்கக்கட்ட பரிசோதனை தொடர்ந்து விரிவாக்கம் காண்கிறது.

காத்திருக்கும் நேரத்தை இம்முயற்சி குறைப்பதுடன், தங்களுக்குத் தேவையான சிகிச்சையை மக்கள் விரைவாகப் பெற்றுக் கொள்வதையும் எளிதாக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தமது எதிர்ப்பார்ப்பினை வெளிப்படுத்தினார்.

மேலும், இந்த மையங்களைத் திறப்பதன் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய மருத்துவமனைகளின் சுமை குறைவதோடு, புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சைப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் கருத்துரைத்தார்.

''ஆரம்ப காலக்கட்டத்திலேயே இந்நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதோடு, அடிக்கடி சென்று பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிப்பதே இம்மையங்களின் குறிக்கோளாகும். முறையாக பரிசோதனை செய்தால் தொட்டகத்திலேயே அதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து அந்நோயையையும் அதன் மூலமாக ஏற்படும் மரணத்தையும் தடுக்கலாம்'', என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் உள்ள தேசிய புற்றுநோய் கழகத்தில் நடைபெற்ற 2024 Pink Oktober கண்காட்சி மையத்திற்கு வருகை மேற்கொண்ட போது, ஃபடில்லா யூசோப் அதனைக் கூறினார்.

இச்சுகாதார கண்காட்சியில் மார்பகம், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதோடு, இலவச HPV தடுப்பூசிகளும் செலுத்தப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)