உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்குதல்? ஆப்கானிஸ்தான் ஆடவர் கைது

09/10/2024 06:26 PM

வாஷிங்டன், 09 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த ஆப்கானிஸ்தான் ஆடவரை போலீஸ் கைது செய்துள்ளது.

ஐ.எஸ். அமைப்புக்காக நசிர் அஹ்மாட் தவேடி அத்தாக்குதலை நடத்தத் திட்டமிருந்ததாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்திருக்கிறது.

27 வயதான அந்த இளைஞர் ஓக்லஹோமாவில் கைது செய்யப்பட்டார்.

"தேர்தல் நாளில் அமெரிக்காவில் ஐ.எஸ் என்ற பெயரில் அரை தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதனை அமெரிக்க நீதித்துறை வெற்றிகரமாக முறியடித்தது," என்று அறிக்கை ஒன்றின் வழி அமெரிக்க நீதித்துறை கூறியது.

அவர் தனது குடும்பத்தின் சொத்துக்களை விற்பதற்கும், குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கும் மற்றும் ஏ.கே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பெறுவதற்கும் திட்டமிட்ட போது கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

நசிருடன் மற்றொரு அவரின் உறவினர் என்று நம்பப்படும் மற்றொரு ஆப்கானிஸ்தான் ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கியிருக்கும் அதிபர் தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)