பொது

GPP-ஐ பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

10/10/2024 04:47 PM

சைபர்ஜெயா, 10 அக்டோபர் (பெர்னாமா) --   வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு தயார் செய்த தரவு மைய திட்டமிடல் வழிகாட்டியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அந்த வழிகாட்டி, தரவு மைய தொழில்துறையின் முழு சுற்றுச்சூழல் அமைப்பைப் பூர்த்தி செய்வதோடு, பங்குதாரர்களின் திட்டமிடல் விண்ணப்பம் மற்றும் அங்கீகார செயல்முறையைச் சீர்ப்படுத்தி எளிமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

புதிய பகுதிகளிலோ அல்லது நடப்பிலுள்ள கட்டிடத்திலோ தள திட்டமிடல் வழிகாட்டி, கட்டிட திட்டமிடல் அனுமதிக்கான மேம்பாட்டு திட்ட விண்ணப்ப செயல்முறை ஒரு Mega Volt Amp-க்கு மேற்பட்ட தரவு மைய மேம்பாட்டு அளவு ஆகியவற்றை உள்ளடக்கி நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை, PLANMalaysia தயார் செய்த இந்த ஜிபிபி இருக்கும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

"தரவு மைய ஜிபிபி திட்டமிடல் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இலக்கவியல் உள்கட்டமைப்பின் மேம்பாட்டை வலுப்படுத்தவும், உள்நாட்டு தேவைகளுக்கான வளங்களின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட நில பயன்பாட்டு மண்டலங்களின்படி அதிக வியூக இடங்களில் தரவு மையங்களை நிர்மானிப்பதன் மூலம் தரவு மைய மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கவும் நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்", என்று அவர் கூறினார்.

இன்று, சைபர்ஜெயாவில் தரவு மைய திட்டமிடல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியப் பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)