பொது

6 கோடியே 88 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

10/10/2024 05:17 PM

ஜோகூர் பாரு, 10 அக்டோபர் (பெர்னாமா) --  2000-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஜோகூர் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 6 கோடியே 88 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகை போதைப் பொருளை அம்மாநில போலீஸ் இன்று அப்புறப்படுத்தியது.

நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 6,630 வழக்குகளில் தொடர்புடைய அந்த போதைப் பொருளை அழிக்க உத்தரவு பெறப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.

"இன்று, ஜோகூர் மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் 989.21 கிலோகிராம் மற்றும் 7,479.9 லிட்டர் கொண்ட ஆபத்தான பல்வேறு போதைப் பொருள் அப்புறப்படுத்தப்பட்டன", என்று அவர் கூறினார்.

இன்று, ஜோகூர் பாருவில் உள்ள ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குமார் அவ்வாறு தெரிவித்தார்.

அந்த போதைப்பொருள் அனைத்தும் நெகிரி செம்பிலான், புக்கிட் பெலாண்டுக்கில் போலீஸ் பாதுகாப்புடன் அழிக்கப்பட்டது.

Heroin, Kanabis, Ketamin, Methamphetamine மற்றும் MDMA ரகத்திலான போதைப் பொருள் அழிக்கப்பட்டனர்.

இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி தற்போது வரை ஜோகூர் மாநிலத்தில் போதைப் பொருள் குற்றங்களுக்களுக்காக 19,726 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5.48 டன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றின் மதிப்பு ஐந்து கோடியே 83 லட்சத்து 50,000 ரிங்கிட் ஆகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)