பொது

பேரிடர்கள் மூன்றாம் நிலையை அடைந்தால் அதன் நிர்வகிப்பை நட்மா ஏற்கும்

10/10/2024 05:18 PM

கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) -- பேரிடர்கள், மூன்றாம் நிலையை அடைந்தால் மாநில பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவிடமிருந்து அதன் நிர்வகிப்பை தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா ஏற்கும்.

மூன்றாம் நிலை பேரிடர் நிர்வகிப்பு என்பது மத்திய அளவில் அல்லது வெளிநாட்டின் உதவியுடன் வளங்களை ஒருங்கிணைத்து, ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஏற்படும் பேரிடர் அல்லது ஒரு பகுதியில் ஏற்படும் சிக்கலான பேரிடரை நிர்வகிப்பது ஆகும் என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இட்ருஸ் விளக்கம் அளித்தார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கட்டளையின் படி, மேம்படுத்தப்பட்ட நட்மா உத்தரவுகளின் அடிப்படையில் இந்த பேரிடர் நிர்வகிப்பு செயல்முறை அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

அந்த உத்தரவு, வெள்ளப் பேரிடரை நிர்வகிப்பது மற்றும் கையாள்வது குறித்து மட்டுமல்லாமல் நாட்டில் நிகழும் அனைத்து விதமான பேரிடர்களையும் உள்ளடக்கி இருக்கும்.

எனினும், அப்பேரிடர் ஒரு மாநிலத்தை மட்டும் உள்ளடக்கி இருப்பதோடு, மாநில அளவில் நிர்வகிக்க முடிந்தால் அது இரண்டாம் நிலை பேரிடராக கருத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)