பொது

செப்டம்பர் மாதம் சுங்கத்துறை வருமானம் 15.43% அதிகரிப்பு

10/10/2024 05:21 PM

ஷா ஆலம், 10 அக்டோபர் (பெர்னாமா) --  அரச மலேசிய சுங்கத்துறை மேற்கொண்ட செயல்பாட்டு தர விதிமுறை  சீர்திருத்தத்தினால் அதன் வருமானம் கடந்த செப்டம்பர் மாதம் வரை 15.43 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில், வரி வசூல் இலக்கிடப்பட்ட 4242 கோடி ரிங்கிட்டைக் காட்டிலும் 654 கோடியே 40 லட்சம் ரிங்கிட் அதிகரித்து 4896 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளதாக ஜேகேடிஎம் தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிசானா முஹமட் சைனுடின் தெரிவித்தார்.

கிள்ளான் துறைமுக ஜேகேடிஎம் இறக்குமதி ஏற்றுமதி கிளையில் இறக்குமதி ஏற்றுமதி ஆதரவு ஆவணங்கள் செயல்முறை, SDSIE மூலம் செயல்பாட்டு தர விதிமுறை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அனிஸ் ரிசானா கூறினார்.

"இந்த SIDSE, ஆவணங்கள் அனுப்பும் செயல்முறையை இணைய அடிப்படையிலான அமைப்பின் வழி எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவும். இதுதான் எனக்கு வேண்டும். இதற்குக் காரணம் இத்தொழில்துறையில் ஈடுபடுபவர்களுக்கு அதற்கான செயல்முறையை எளிதாக்குவது சுங்கத்துறையின் கடமையாகும்", என்று அவர் கூறினார்.

இன்று, கிள்ளான் துறைமுகத்தில் SDSIE தொடக்க விழாவிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)