பொது

ஆசியான் - சீனா உச்சநிலை மாநாட்டில் பிரதமர் இன்று பங்கேற்றார்

10/10/2024 05:41 PM

வியன்டியான், 10 அக்டோபர் (பெர்னாமா) --  44-வது மற்றும் 45-வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் சம்பந்தப்பட்ட இதர மாநாடுகளில் இரண்டாவது நாளாக கலந்துக் கொள்ளும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று ஆசியான்-சீனா உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றார்.

இதர ஒன்பது ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அன்வார், சீனப் பிரதமர், லி கியாங்கை வியன்டியானில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் சந்தித்தார்.

ஆசியான்-தென் கொரியா விவாத உறவுகளின் 35-வது ஆண்டு நினைவாக 25-ஆவது ஆசியான்-தென் கொரியா உச்சநிலை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கு முன்னர் அன்வார் உரையாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர், பேராசிரியர் கிளாஸ் ஸ்வாப் மரியாதை நிமித்தம் பிரதமர் அன்வாரை சந்தித்தார்.

மற்ற உயர்மட்ட நிலையிலான சில கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவிருக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)