பொது

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டத்திற்கு மலேசியா வரவேற்பு

11/10/2024 06:17 PM

கோலாலம்பூர், 11 அக்டோபர் (பெர்னாமா)  - GOOGLE, MICROSOFT. ENOVIX CORPORATION, AMAZON WEB SERVICES, ABBOTT LABORATORIES மற்றும் BOEING போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின், 1470 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டு திட்டத்தை மலேசியா வரவேற்கிறது.

லாவோஸ், வியன்டியானில் நடைபெற்று வரும் 44 மற்றும் 45ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் வெளியே, அமெரிக்க தலைமைச் செயலாளர் அந்தோனி ப்ளின்கனுடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்தார்.

மேலும், புதிய தொழில்துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் மலேசியா எண்ணம் கொண்டுள்ளதாக அன்வார் கூறினார்.

மலேசியா - அமெரிக்கா உடனான கூட்டுறவின், பத்தாம் நிறைவாண்டை இரு நாடுகளும் கொண்டாடும் வேளையில், ​​இம்மாத இறுதியில் புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் மூத்த அதிகாரிகள் உடனான கலந்துரையாடலை முன்னிட்டு அமெரிக்கப் பேராளார்களை மலேசியா வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
.
ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு மன்றம், U-N-S-C-இன் 2735 தீர்மானத்தில் உள்ளது போன்று, இரு தரப்பு நாடுகளுக்கிடையிலான பங்களிப்பை விரைந்து செயல்படுத்துவதற்கு அமெரிக்கா தனது செல்வாக்கை பயன்படுத்துமாறும் மலேசியா வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, இவ்வாண்டு ஜூன் 10ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட 2,728 தீர்மானம், காசாவில் நிலவும் அனைத்து மோதல்களை நிறுத்துவதற்கான அழைப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)