பொது

அக்டோபர் 13-இல் புரூணை செல்கிறார் மாமன்னர்

11/10/2024 06:13 PM

கோலாலம்பூர், 11 அக்டோபர் (பெர்னாமா) --   மலேசியாவுக்கும் புரூணைக்கும் இடையிலான 40 ஆண்டுக்கால அரச தந்திர உறவை மேலும் வலுப்படுத்த மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அக்டோபர் 13 முதல் 15-ஆம் தேதி வரை அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

சமூகம், கலாச்சாரம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் கௌரவத்தை மேலும் கண்ணியப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இப்பயணத்தில் மாமன்னருடன், பேரரசியார் ராகஜா சாரித் சோஃபியாவும் இணைந்து கொள்வார் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இஸ்தானா நெகாரா அறிவித்தது.

புரூணை சுல்தான் ஹசனல் போல்கியா மற்றும் அவரது துணைவியார் அரச மனைவி பெங்கீரன் அனாக் ஹாஜா சலேஹா ஆகிய இருவரும் கடந்த ஜூலை மாதம் 17-வது மாட்சிமை தங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.

அதன் பின்னர், மலேசியாவிற்கும் புருணைக்கும் இடையிலான உறவு மேலும் நெருக்கமானது.

இந்த அதிகாரப்பூர்வ பயணத்தின் போது மாமன்னர் தம்பதியர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர்.

சிங்கப்பூர் மற்றும் சீனாவிற்குப் பிறகு சுல்தான் இப்ராஹிமிம் மேற்கொள்ளும் மூன்றாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)