பொது

மீட்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு இல்லத்தை சில தரப்பினர் உளவு பார்க்கின்றனர்

16/10/2024 06:21 PM

புத்ராஜெயா, 16 அக்டோபர் (பெர்னாமா) -- GISBH எனப்படும் GLOBAL IKHAWAN SERVICE AND BUSINESS குழும நிறுவனத்தை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட OP GLOBAL நடவடிக்கையில் காப்பாற்றப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு இல்லத்தை சில தரப்பினர் உளவு பார்க்கும் தகவலை மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.

எனினும், சம்பந்தப்பட்ட உளவு பார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் தரப்பினரை தங்கள் தரப்பு அடையாளம் காண முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

"வெளியில் சிலர் சில இடங்களில் உளவு பார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதை நாங்கள் கண்காணிக்கிறோம். ஆனால், அவர்கள் அப்பாவா அல்லது யார் என்று எங்களுக்குத் தெரியாது. அதனால்தான், சம்பந்தப்பட்ட அவ்விடம் உண்மையிலேயே பாதுகாப்பான இடமா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்," என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்க அந்த பாதுகாப்பு இல்லத்தில் உயர் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)