விளையாட்டு

வியன்னா பொது டென்னிஸ்; ஜேக் டிரேப்பர் வாகை

28/10/2024 07:53 PM

வியன்னா, 28 அக்டோபர் (பெர்னாமா) --   ஆஸ்திரியாவில் நடைபெற்ற வியன்னா பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளராக பிரிட்டனின் ஜேக் டிராப்பர் வாகை சூடினார்.

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டிராப்பர், கரேன் கேச்சனோவ்வுடன் மோதினார்.

22 வயதான ஜேக் டிராப்பர் மிகவும் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

முதல் செட்டில் 6-3 என்ற புள்ளிகளிலும் இரண்டாம் செட்டில் 7-5 என்ற புள்ளிகளிலும் எளிதான வெற்றியைப் பதிவு செய்து வியன்னா பொது டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை டிராப்பர் தட்டிச் சென்றார்.

இவர்களின் ஆட்டம் 96 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)