விளையாட்டு

 புதிய சின்னத்தை வடிவமைக்கும் போட்டி; KLFA திட்டம்

16/10/2024 07:27 PM

கோலாலம்பூர், 16 அக்டோபர் (பெர்னாமா) -- அடுத்து வரும் பருவத்தில் பயன்படுத்துவதற்கு KL CITY FC அணி, புதிய சின்னத்தை வடிவமைக்கும் போட்டியை ஏற்பாடு செய்ய கோலாலம்பூர் காற்பந்து சங்கம் KLFA திட்டமிட்டுள்ளது.

சின்னம் மாற்றப்படும் நிலையில் மீண்டும் “The Hawks” என்ற பெயரில் வலிமையுடன் KL CITY FC அணி செயல்படும் என்று KLFA-இன் தலைவர் சைட் யாசிட் சைட் ஒமார்  தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை புதிய செயற்குழு உறுப்பினர்களின் தலைமைத்துவத்தின் கீழ் மறுபெயரிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை தமது தரப்பு போட்டிக்கான தேதியை இன்னும் நிர்ணயிக்கவில்லை.

எனினும், KL CITY FC-இன் புதிய ஜெர்சிக்கு அந்த சின்னத்தைப் பயன்படுத்தி அடுத்த ஆண்டு போட்டி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)