பொது

ஐக்கிய அரபு சிற்றரசுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடலாம் 

17/10/2024 05:41 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசியா இவ்வாண்டு இறுதியில், ஐக்கிய அரபு சிற்றரசு UAE உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், FTA-வில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது தொடர்பான கலந்துரையாடலை தங்கள் தரப்பு கடந்த வாரம் முடித்தாகவும், தற்போது அதனை இறுதி செய்ய தேசிய சட்டத்துறையுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.

''கடந்த வாரம் நாங்கள் கலந்துரையாடலை முடித்தோம். எங்கள் சட்ட வழக்கறிஞர் வழி, எங்களின் நிறுவனமும் அவர்களின் நிறுவனமும் ஒப்பந்தத்தை இறுதி செய்து வருகிறோம். இந்த ஆண்டின் இறுதியில் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று நம்புகிறேன்,'' என்றார் அவர்.

இன்று, தித்திவங்சாவில், Fun Run Bernama Radio & MITI நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் அவ்வாறு கூறினார். 

அந்த ஒப்பந்தத்தின் மூலம், நாட்டில் உள்ள நிறுவனங்கள் குறைந்த அல்லது கட்டணமில்லா வர்த்தக முறையில் பயனடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)