பொது

'COUNTER SETTING': முக்கிய நபராக குறிப்பிடப்பட்ட மூவருக்கும் அவ்விவகாரத்திற்கும் தொடர்பில்லை

17/10/2024 06:34 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா)  - 'counter setting' குழுவில் முக்கிய நபராக குறிப்பிடப்பட்ட மூன்று பெயர்களுக்கும் அவ்விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் SPRM-மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

இந்த COUNTER SETTING விவகாரத்தில் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் மூன்று நபர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள இணைய செய்தி தளம் அந்தத் தகவல்களை அமலாக்க தரப்பிடம் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் நேற்று தெரிவித்திருந்து தொடர்பில் அசாம் பாக்கி இவ்வாறு தெரிவித்தார்.

'counter setting' குற்றச்செயலைப் புரிய 'Tok Yah atau 'Tok Ayah' மற்றும் 'DK' என்ற மூன்று குறியீட்டு பெயர்களைப் பயன்படுத்தியது தொடர்பில் Kepong நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் நேற்று மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)