பொது

சாலை விபத்தில் உயிரிழந்த அஹ்மாட் ஹஃபிஸ் குடும்பத்திற்கு உதவிநிதி வழங்கப்பட்டது

17/10/2024 07:14 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா)  - கடந்த திங்கட்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்த ASTRO அவானி ஊழியர் அஹ்மட் ஹஃபிச் அஷார் நோர்டின் டும்பத்தினருக்கு மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா இன்று உதவி நிதியை வழங்கியது.

மலாக்கா, அலோர் காஜா, தாமான் பாயா ரும்புன் பெர்டானாவில் அமைந்துள்ள அவரின் வீட்டில், பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடின் அந்நிதியை வழங்கினார்.

Tabung Kasih@HAWANA, பெர்னாமா சமூகநலம் உட்பட பெர்னாமாவின் பெண்களுக்கான சங்கம், Benita ஆகியவற்றின் உதவிநிதி, பெர்னாமாவின் நிர்வாகப் பிரிவில் உதவி நிர்வாகியாகப் பணிபுரியும் அஹ்மட் ஹஃபிசின் மனைவி Nur Farrah Hanna Ibrahim-இடம் ஒப்படைக்கப்பட்டது.

''அஹ்மாட் ஹஃபிஸ் அஸ்ஹார் பெர்னாமா தொலைக்காட்சியின் முன்னாள் பணியாளர். பின்னர் அவர் ஆஸ்ட்ரோ அவானிக்கு மாற்றலாகிச் சென்றார். நூர் ஃபாரா ஹன்னா எதிர்கொண்டிருக்கும் இத்துயரம் எங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,''என்றார் அவர்.

அக்குடும்பம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு, தமது கணவரின் மரணம் தொடர்பான எந்தவோர் உரிமைகோரல் குறித்த ஆலோசனை சேவைகளையும் வழங்கி நூர் ஃபாரா ஹன்னாவிற்கு பெர்னாமா தொடர்ந்து உதவுகளை நல்கும் என்று  நூருல் அஃபிடா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)