பொது

தொடர்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு மக்களின் நல்வாழ்விற்கு பயன்படுத்தப்படும்

20/10/2024 07:49 PM

புத்ராஜெயா, 20 அக்டோபர் (பெர்னாமா) -- 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தொடர்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட 255 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு, மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும்.

மேலும், சமூக தொடர்பு உட்பட தொலைத்தொடர்பு இணைப்பையும் உள்கட்டமைப்பையும் வலுப்படுத்துவதற்கும் சரியான தகவல்களை வழங்குவதற்கும் தொடர்பு அமைச்சுக்கான இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று அவ்வமைச்சு இன்று வெளியிட்டு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2025 வரவு செலவுத் திட்டம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான மற்றும் மக்களின் மதிப்பை உயர்த்துவதற்கான மடானி அரசாங்கத்தின் முயற்சிகளின் தொடர்ச்சியாகும்.

எனவே, இந்த 255 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்ட ஏழு முயற்சிகள் குறித்து தொடர்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய, மலேசிய அரசாங்க அழைப்பு மையம் MyGCC, சேவையை மேம்படுத்துவதன் வழி, மேலும் விரிவான பொது தகவல் தொடர்பு அமைப்பை உறுதிசெய்வதும் அந்த ஏழு முயற்சிகளில் அடங்கும்.

அதோடு, இணையம் வழியான தொழில்முனைவோர் நடவடிக்கையின் மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிக்க நாடு முழுவதிலும், தேசிய தகவல் பரப்பு மையம், நாடி-ஐ வலுப்படுத்துவதற்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி-கான 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடும், அம்முயற்சிகளில் அடங்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)