பொது

பயிற்சியில் இருந்த படகு மூழ்கிய சம்பவத்தில் பலியான ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டன

20/10/2024 07:26 PM

கூச்சிங், 20 அக்டோபர் (பெர்னாமா)  - கடந்த வெள்ளிக்கிழமை ROYAL BAY COMMERCIAL CENTRE-க்கு அருகில் உள்ள சரவாக் ஆற்றில் பயிற்சியில் இருந்த படகு மூழ்கிய சம்பவத்தில் பலியான ஐவரின் உடல்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டன.

காலை மணி 6.16 தொடங்கி 7.09 வரை அவர்களின் உடல்கள் கட்டம் கட்டமாக கண்டுப்பிடிக்கப்பட்டதாக சரவாக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை JBPM-இன் நடவடிக்கை மைய பேச்சாளர் தெரிவித்தார்.

காலை மணி 6.16-க்கு இருவரும்,6.40-க்கு ஒருவரும் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் காலை மணி 7.07-க்கு ஒருவரும் 7.09-க்கு மேலும் ஒருவரும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி கண்டுப்பிடிக்கப்பட்டனர்.

34 வயதுடைய முஹ்மட் இக்மால் சமாயில் , 32 வயதுடைய மஜூரி மாரூஃப், 26 வயதுடைய முஹ்மட் அஃபிக் இஷாம்முடின் அசாரி, 23 வயதுடைய முஹ்மட் கைரூல் ஹிஷாம் கஸ்தூரி  மற்றும் 26 வயதுடைய முஹ்மட் கைரூல் பிடின் ஆகியோர் இதில் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹ்மட் ஃபர்ஹான் லீ அப்துல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சரவாக் பொது மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)