பொது

பட்டதாரிகள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 1700-ஐ தொடக்க கட்ட ஊதியமாக முதலாளிமார்கள்நிர்ணயிக்கக் கூடாது

21/10/2024 07:16 PM

பண்டார் பெர்மைசூரி, 21 அக்டோபர் (பெர்னாமா) -- 2025 வரவு செலவுத் திட்டத்தில் அடிப்படை சம்பளம், 1500-ல் இருந்து 1700-க்கு அதிகரிக்கப்பட்டுள்ள வேளையில், பட்டதாரிகள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் அதே தொகையை தொடக்க கட்ட ஊதியமாக முதலாளிமார்கள், நிர்ணயிக்க கூடாது என அரசாங்கம் நினைவுறுத்தியுள்ளது.

அழுக்கு, அபாயம், கடினம் ஆகிய 3D துறையில் பணிபுரிபவர்கள் உட்பட, கல்வித் தகுதிகள் மற்றும் குறைந்த திறன்களைக் கொண்ட அடிப்படைத் தொழிலாளர்களுக்கு ஏற்ப ஊதிய முறை இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் திறன் மற்றும் அவர்களின் தகுதிகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஸ்டீவன் சிம், குறைந்தபட்ச ஊதியத்தை தொடக்க சம்பளமாக நிர்ணயிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனெனில், இன்னும் 1,700 ரிங்கிட்டுக்கும் குறைவாக ஊதியம் பெறும் 43 லட்சத்து 50 ஆயிரம் பேரை இலக்காகக் கொண்டு இந்த ஊதிய சீரமைப்பு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊதிய முறையை மாற்றி அமைப்பது, நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் என்று அவர் வலியுறுத்தியதோடு, இது திறமையானவர்களின் வருகையை அதிகரித்து முதலாளிகளுக்கு தரமான பணியாளர்களைப் பெறுவதை எளிதாக்கும் என்றும் ஸ்டீவன் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)