பொது

உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சு ஏற்பாடு

21/10/2024 07:28 PM

புத்ராஜெயா, 21 அக்டோபர் (பெர்னாமா) --   2025ஆம் ஆண்டு ஆசியான் மாநாட்டை ஏற்று நடத்துவதற்கு முன்னதாக, உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திட்டங்களுக்கும் உயர்க்கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய கல்வி அமைச்சர்கள் அமைப்பு SEAMEO-ஐ உட்படுத்திய கல்வி அம்சங்களில் மட்டும் பொதுவாக கவனம் செலுத்தப்படும் நிலையில்..

உயர்கல்வி அமைச்சர்களுடனான ஒரு கூட்டத்தைத் தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக உயர்க்கல்வி அமைச்சர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

''பெரும்பாலான ஆசியான் நாடுகள் மலேசியாவின் பரிதுரைகள் அடிப்படையில் ஏற்றுக் கொண்டன. ஆசியானில் உயர்கல்வியின் பின்னணியில் விவாதத்தை நிபுணத்துவப்படுத்துகிறது. முன்னதாக, நாம் அனைவரும் அறிந்தப்படி, இது SEAMEO (தென்கிழக்கு ஆசிய கல்வி அமைச்சர்கள் அமைப்பு) மீது மட்டும் கவனம் செலுத்தியது. ஆசியான் கல்விக்கு SEAMEO. ஆனால், இம்முறை ஆசியான் கல்வி அமைச்சர் கூட்டத்திற்கு பிறகு உயர்கல்வி அமைச்சர் கூட்டம் இருக்கும் என்பதை ஆசியா நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன'', என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 2024 பேராசியர் கழக மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய பின்னர்,  டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)