பொது

நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை

22/10/2024 05:52 PM

கோலாலம்பூர், 22 அக்டோபர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டில் ஆசியானிற்கு தலைமை ஏற்பதை எதிர்கொள்வதற்கான தயார்நிலை நடவடிக்கையாக நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் சில மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள MALAYSIA AIRPORT குழும நிறுவனம், MAHB கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து நுழைவாயில்களும் தயார்நிலையில் இருப்பதை போக்குவரத்து அமைச்சு உறுதிசெய்ய வேண்டும் என்ற அமைச்சரவையின் உத்தரவிற்கு ஏற்ப இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் குறிப்பாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று ANTHONY LOKE குறிப்பிட்டார்.

அதிகமான பிரமுகர்களும், ஆசியான் தலைவர்களும் நாட்டிற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

அதைத் தவிர்த்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கம் முதல் தானியங்கி பயணிகள் இயக்கச் சேவை, Aerotrain செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் லோக் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)