பொது

2025 ஆசியான் - மலேசியா தலைமைத்துவத்திற்கான சின்னம் அறிமுகம் கண்டது

22/10/2024 06:40 PM

கோலாலம்பூர், 22 அக்டோபர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டில் 10 உறுப்பினர்களைக் கொண்ட வட்டார குழுவை வழிநடத்த மலேசியா தயாராகி வரும் வேளையில், 2025 ஆசியான் - மலேசியா தலைமைத்துவத்திற்கான சின்னத்தையும் கருப்பொருளையும் வெளியுறவு அமைச்சு இன்று புத்ராஜெயாவில் அறிமுகப்படுத்தியது.

இவ்வட்டாரத்தின் பண்பாடு, ஒருமைப்பாடு மற்றும் அடையாளத்தை குறிக்கும் மலேசியாவின் தேசிய மலரான, செம்பருத்தி பூவின் வடிவத்தைக் கொண்டு இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சின்னத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள் ஆசியானின் அனைத்து உறுப்பு நாடுகளின் கொடிகளில் உள்ள முதன்மை வர்ணங்களை பிரதிபலிக்கின்றன.

“Keterangkuman dan Kemampanan” என்ற கருப்பொருளிலான, 2025 ஆசியான் - மலேசியா சின்னத்தை வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜி முஹ்மட் ஹசான் அறிமுகப்படுத்தினார்.

இச்சின்னம் மலேசியா மடானியின் ஆறு அடிப்படை கூறுகளான நிலைத்தன்மை, கண்ணியம், மரியாதை, படைப்பாற்றல், நல்வாழ்வு, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)